வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போன நிலையிலே இன்று மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரியில் நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் (78) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரிபார்வையிட்டிருந்ததோடு இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.