விபத்து ஒன்றில் காயமடைந்த இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது வாகனத்தில் ஏற்றி சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் ஹொப்டன் பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்களை பார்வையிட சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை பால் சபைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதை அவதானித்துள்ளார்.
அதில் பயணித்த தந்தை மற்றும் மகன் இருவரும் பலத்த காயமடைந்திருப்பதை அவதானித்த அவர், தனது வாகனத்தினை நிறுத்தி காயமடைந்த இருவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று பசறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
காயமடைந்த இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.