லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று காலை 4.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.
சம்பவத்தின் போது 3 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், 9 ம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் இந்த அணர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.