இடைக்கால அரசாங்கத்திற்கு 20 உறுப்பினர்களுக்கு மிகாத அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய,பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.