பதுளை கந்தகொல்ல தமன்வர பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02) பிற்பகல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளைஇ தமன்வர கந்தகொல்லஇ புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால் நேற்று காலை இளைஞனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது, கந்தகொல்லை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஹெய்னரன்கொல்ல ஓயா பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நீரோடையின் கீழ் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே உயிரிழந்தவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.