இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை நடைபெற்றது.
ஏற்கனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான 13 முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய யோசனைகளை முன் வைத்துள்ளது.
இந்த யோசனைக்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவையும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த யோசனைகள் குறித்து பரிசீலித்து பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.