Thursday, January 16, 2025
27.9 C
Colombo
மலையகம்வயோதிப தம்பதி சடலங்களாக மீட்பு

வயோதிப தம்பதி சடலங்களாக மீட்பு

கொஸ்லந்த – வெலன்விட்ட 100 ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்லந்த – வெலன்விட்டவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் வயோதிப தம்பதியினர் தனியாக வசித்து வந்ததாகவும், வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த இவர்களது மகள் புத்தாண்டு முடிந்து பெற்றோரை பார்ப்பதற்காக நேற்று (1) வீட்டிற்கு வந்த போது தந்தை மற்றும் தாய் சடமலாக இருப்பதை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட போது, ​​தோட்டத்தில் உயிரிழந்த பெண் வீட்டுக்கு மின்சாரம் வழங்கும் மின்சார வயரைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

வீட்டிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றை குறித்த பெண் வெட்டிய போது அது மின் கம்பியில் விழுந்து வயர் உடைந்ததுள்ளது. கம்பியை அகற்ற சென்ற போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் வீட்டிற்கு செல்லும் வீதியில் கணவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles