வடக்குசட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

பருத்தித்திறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகர்கோவில் பகுதியில் நீண்டகலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவர் பொலிஸாரின் கண்களில் இருந்து தப்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்திறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழு குறித்த சந்தேக நபரது வீட்டை சுற்றிவளைத்து,சந்தேக நபரை கைது செய்ததுடன் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சான்று பொருட்களும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles