Thursday, June 25, 2026
27.8 C
Colombo
வடக்குவவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்

வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்

வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் கடந்த 30 ஆம் திகதி மரணமடைந்தார்.

இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles