Thursday, September 19, 2024
28 C
Colombo
கிழக்குகந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு (Photos)

கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு (Photos)

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 10 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இதில் நான்கு கதவுகள் இரண்டு அடிகள் அளவுக்கும், ஏனைய ஆறு கதவுகளும் ஒரு அடி அளவுக்கும் திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாகும்.

இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, மேலதிக நீரை வெளி யேற்றுவதற்காக ஏற்கனவே ஒரு அடிக்கு ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன .

இதனால் 2500 கன அடி அளவு நீர் வெளியேறி வருவதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles