Monday, July 21, 2025
27.2 C
Colombo
வடக்குஅராலியில் 6 வயது சிறுமியை தாக்கிய தந்தை

அராலியில் 6 வயது சிறுமியை தாக்கிய தந்தை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை தந்தை தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார்.

இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறியப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு சென்ற உத்தியோகத்தர்கள் சிறுமியின் தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தந்தை வேலைக்கு சென்றதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாய், தந்தை இருவரும் விசாரணைக்காக சங்கானை பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் நாளாந்தம் மதுபோதையில் வந்து பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் பிள்ளைகளுக்கு செய்யும் கொடுமைகள் குறித்து தாயார் இதுவரை எந்தவிதமான முறைப்பாடுகளும் செய்வதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles