Friday, August 8, 2025
27.8 C
Colombo
சினிமாதென் கொரிய நடிகர் லீ சன்-கியூன் மர்ம மரணம்

தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன் மர்ம மரணம்

ஒஸ்கார் விருது பெற்ற பாரசைட் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன் உயிரிழந்துள்ளார்.

48 வயதான நடிகர் இன்று காலை சியோலில் உள்ள பிரதான பூங்கா ஒன்றில் காரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லீ சன்-கியூன் தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் அவர் ஒரு குறிப்பை எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக தென் கொரிய பொலிஸார் தெரிவித்தனர்.

பாரசைட்டில் லீ சன்-கியூனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் சிறந்த படம் உட்பட நான்கு ணஸ்கார் விருதுகளைப் பெற்றது.

அவர் அண்மையில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles