அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா்.
ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதை தவிர, எதிர்த் தரப்பாக செயற்படவோ அல்லது எதிர்க் கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளவோ தனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டாா்.
மேலும் அவர், தற்போதுள்ள தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை கொண்டே அடுத்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.