வடக்குநெல்லியடியில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

நெல்லியடியில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள், சட்டவிரோத சிகரெட் பெட்டிகள் என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளுகளும் மீட்கப்பட்டது.

அதனை அடுத்து அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles