Tuesday, May 5, 2026
31 C
Colombo
சினிமாவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்.ஐ.சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்.ஐ.சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் புதிய படத்துக்கு ‘எல்ஐசி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று இடம்பெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் வீடியோவாக வெளியிட்டு உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில்இ இப்படத்தின் பூஜை நேற்று (14) சென்னையில் நடைபெற்றது.

இப்படத்துக்கு ‘எல்ஐசி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

படத்தின் பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles