Wednesday, April 30, 2025
27 C
Colombo
வடக்குமட்டு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் வாவியல் உயிரிழந்த நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் சம்பவதினமான இரவு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் தடவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் இதுவரை யார் எனஅடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles