Thursday, January 16, 2025
27.9 C
Colombo
மலையகம்ஹெரோயினுடன் இருவர் கைது

ஹெரோயினுடன் இருவர் கைது

பண்டாரவளை தர்மபால கல்லூரிக்கு அருகில் 728 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (13) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

அதற்கமைய, கபில்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடம் 432 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மற்றைய சந்தேக நபரான பண்டாரவளை -பிதுனுவெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரிடம் 296 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்தபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை பண்டாரவளை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles