பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ரஞ்சித் சியம்பலாபிட்டியவை மீண்டும் பரிந்துரைக்கிறது.
அவரது நியமனத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அந்த பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விலகி இருந்த நிலையில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் SLFP ரஞ்சித் சியம்பலாபிட்டியவை மீண்டும் அந்த பதவிக்கு பரிந்துரைக்கும் நிலையில் அவரை ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
