Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024 இல் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

2024 இல் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

March 1, 2022 – 11:28am

90 வீதமான காணி சுவீகரிப்பு நிறைவு

கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

னந்தாராம  விகாராதிபதி தெனிகே  சிறினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2014நவம்பரில் குருநாகல் தம்புள்ளை கலகெதரவில் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி   நாட்டினார் .

இதற்கான  அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதுடன் அவர் தோல்வியடைந்ததையடுத்துவுன்  அவை ரத்துச் செய்யப்பட்டன. அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் 2018இல் கடந்த  அரசினாலேயே இதனை   திறந்து வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் பழிவாங்கல் செய்ததால்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.  2017ஆம் ஆண்டு கடவத்தை முதல் மீரிகம வரையும் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையும் 1, 2என இரண்டு பிரிவுகளை  கடந்த அரசு ஆரம்பித்தது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் கடவத்தையில் இருந்து மீரிகம  வரையான நிர்மாணப் பணிகளை முதலாவதாக வழங்கியது.

எமது அரசு ஆட்சிக்கு ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டளவில் 36பில்லியன் ரூபாவை   60நாட்களுக்குள்  வழங்கினார்.    என்னால் முடிந்தவரை விரைவாக இதைச் செய்ய நான் கடுமையாக உழைக்கிறேன்.

  இந்த நெடுஞ்சாலை விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் குறிப்பிட்ட நாளில்  நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டது.  அதனால்   40கி.மீ., தூரத்தை  நிறைவு செய்து அதனை  திறக்க முடிந்தது. பிரதமரின் தலைமையில் பொதுஹெர தொடக்கம் ரம்புக்கனை வரை நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் ஊடாக நேரடி ஒப்பந்தங்களை வழங்கி  பணிகளை ஆரம்பித்தோம். இப்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் திருடுவதாக  பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. மீதி இருபது கிலோமீட்டர்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நம்புகிறேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவின் பேரில் கண்டிக்கான நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகள்  2024ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக இதை செய்து முடிப்போம். நிச்சயமாக நாங்கள் அதை  செய்வோம். கோவிட் கோவிட் என்று கூறி நாங்கள் எந்த  அபிவிருத்தி  செயல்பாடுகளை  நிறுத்தவில்லை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின்படி,  இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொண்ணூறு சதவீத  காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்து சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும் என்றார்.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles