அரசியல்ரணிலுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டேன் - சஜித்

ரணிலுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டேன் – சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.

அவ்வாறான எந்த முன்னெடுப்பும் இல்லை. அவருடன் எந்த கூட்டணியையும் தாம் அமைக்கப்போவதில்லை.

அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று சில ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles