Friday, January 17, 2025
24.3 C
Colombo
கிழக்குசாரதியால் தாக்கப்பட்ட நேர கண்காணிப்பாளர் வைத்தியசாலையில்

சாரதியால் தாக்கப்பட்ட நேர கண்காணிப்பாளர் வைத்தியசாலையில்

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை நேர கண்காணிப்பாளருக்கும் தனியார் பேருந்து சாரதிக்கும் இடையில் இன்று (08) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சாரதி, நேர கண்காணிப்பாளரை தாக்கியதில் அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உரிய நேரத்திற்கு பேருந்தை செலுத்தாமல் பேருந்து நிலையத்தில் தரித்து வைத்திருந்ததால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளதாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதற்கு நீதி வழங்க வேண்டும் என கோரி அக்கரைப்பற்று பேருந்து நிலையத்தில் இன்று (08) காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததுடன் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles