Friday, March 14, 2025
26.2 C
Colombo
கிழக்குபெண்ணின் நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நபருக்கு 2 ஆண்டுகள் சிறை

பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நபருக்கு 2 ஆண்டுகள் சிறை

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தமது அந்தரங்க புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக குற்றப் புலனாய்வு பிரிவினர், சந்தேக நபரை கைது செய்து இன்று (07) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு தொடர்பான விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் தமது குற்றத்தினை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அக்கரைப்பற்று நிதிமன்ற நீதிவான் தீர்ப்பளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles