Friday, March 14, 2025
26.2 C
Colombo
அரசியல்மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இதைவிட நன்றாக இருந்தோம்!

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இதைவிட நன்றாக இருந்தோம்!

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாம் இதை விட வசதியாக இருந்ததாகவும், நாம் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘2009 இல் முழு உலகமும் சரிந்தபோது, ​​நாங்கள் போரை முடித்தோம். நமது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தாண்டிய ஒரே நாடு சீனா. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் கைப்பற்றிய போதும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 05% ஆக இருந்தது. ஜனாதிபதி கோட்டாபயவின் அர்ப்பணிப்பினால், கொவிட் தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய உலக நாடுகளில் நாம் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்தோம். அதுவும் ஒரு வெற்றி’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles