கால்பந்து கூட்டிணைவுக் கிண்ணத் (கார்லிங் கிண்ணம் – லீக் கிண்ணம்) தொடரின் இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.இந்த சம்பியன் பட்டத்தின் மூலம் கார்லிங் கிண்ணத் தொடரில் ஒன்பதாவது முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதுவே இத்தொடரில் அதிகபட்ச சம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியின் சாதனையாகும்.
வெம்ப்ளி விளையாட்டரங்களில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணியும் செல்சியா அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 11–10 என்ற பெனால்டி ஷூட்-அவுட் முறையில் லிவர்பூல் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
இதற்கு முன்னதாக, 1980-81, 1981-82, 1982-83, 1983-84, 1994–95, 2000-01, 2002–03, 2011–12ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
1977-78, 1986-87, 2004-05, 2015-16ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது.