மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் பகுதியளவில் தாழ் இறங்கும் அபாயம் காணப்படுகிறது.
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவான்னெலிய பத்தனை எனும் பகுதியில் வீதி தாழ் இறங்கியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவே இவ்வாறான தாழ் இறக்கம் ஏற்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான அனர்த்தத்தினால் வீதியில் பயணிப்போர் முக்கியமாக வாகன சாரதிகள் அவதானமாக குறித்த வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இந்த வீதி தாழ் இறங்கும் அபாயம் உள்ளது.