Saturday, September 6, 2025
30.6 C
Colombo
வடக்குபால் புரையேறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

பால் புரையேறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது.

மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

குறித்த குழந்தை பிறந்த நாள் முதல் தொடர்ச்சியாக வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.

பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles