Friday, January 17, 2025
24.3 C
Colombo
மலையகம்நுவரெலியாவில் அரச - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் : மூவர் கைது

நுவரெலியாவில் அரச – தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் : மூவர் கைது

நுவரெலியாவில் தனியார் மற்றும் அரச பேருந்து ஊழியர்களுக்கு இடையில் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை மாலை நில்தண்டா ஹின்ன சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதனால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (04) நுவரெலியாவில் தீடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் மூவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மேலும் மூவரை கைது செய்ய கோரியும் தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles