சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று பிற்பகல் 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள் இரண்டினை தென்மராட்சி – நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இதன்போது கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.