மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று அனுர குமார முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்தார்.
இதனால் தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.