நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா விடுதி நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக தபால் நிலையத்திற்கு முன்பாக திரண்ட நுவரெலியா தபால் ஊழியர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.