Wednesday, May 14, 2025
27.9 C
Colombo
வடக்குவவுனியாவில் கணவனும் மனைவியும் படுகொலை (Photos)

வவுனியாவில் கணவனும் மனைவியும் படுகொலை (Photos)

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

செட்டிகுளம் பிரதானவீதியில் மேற்படி தம்பதிகளின் மகன் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் அவர்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றயதினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தம்பதிகள் வர்த்தக நிலையத்திற்கு பின் புறத்தில் உள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வர்த்தக நிலையத்தை திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 72 வயதான பசுபதி வர்ணகுலசிங்கம் என்பவரும், அவரது மனைவியான 68 வயதானகனகலட்சுமி என்பவருமே படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், 5 பவுண் பெறுமதி மிக்க தங்க நகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles