Saturday, April 19, 2025
30 C
Colombo
வடக்குபல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் கைது

பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை நேற்று (28) புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைவேலி பகுதியினைச் சேர்ந்த 29 வயதான குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அவரால் களவாடப்பட்ட 16 எரிவாயு சிலிண்டர்களும், ஒரு தண்ணீர் மோட்டாரும், ஒரு மிதிவண்டியும், வயர் ரோல்கள் உட்பட பெருமளவான பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் வீடுகளுக்கு செல்லும் குறித்த இளைஞன் அங்கு காணப்படும் எரிவாயு சிலிண்டர்களை களவாடுவதுடன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இவற்றை விற்று அந்த பணத்தை போதைப் பொருட்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தி வருவதாக விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக் குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles