கொடிகாமம் மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறித்த ஆடையை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை கொடிக்காமத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .