Sunday, April 20, 2025
29 C
Colombo
வடக்குகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்றுடன் நிறைவு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்றுடன் நிறைவு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (29) நிறைவடைகிறது.

மீண்டும் மார்ச் முதலாம் திகதி அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது

ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28)வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக இணங்காணப்பட்டுள்ள உடற்பாகங்களை மீட்பதற்காக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது

இது தொடர்பான மேலதிக விடயங்களை கலந்தாலோசித்து முடிவெட்டுவதற்காக இம்மாதம் 14 ஆம் திக்கு குறித்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles