Friday, September 12, 2025
28.9 C
Colombo
வடக்குயாழ். இளைஞன் மரணம்: விஞ்ஞான ரீதியான சான்றுகள் சேகரிப்பு

யாழ். இளைஞன் மரணம்: விஞ்ஞான ரீதியான சான்றுகள் சேகரிப்பு

சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சான்றுகள், தடயங்களை சேகரிக்கும் முகமாக நேற்றைய தினம் விசாரணைகள் நடைபெற்றன.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் நபர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தார்.

அதன் போது, தம்மை பொலிஸார் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தாக்கி சித்திரவதை புரிந்தாக அவர் குறிப்பிட்டார்.

அதனை அடுத்து சாட்சி கூறிய இடங்களுக்கு சாட்சியை அழைத்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை செய்து, விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள், சாட்சியங்கள், தடயங்களை சேகரிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டத,

சாட்சியை தனியே பொலிஸாருடன் அனுப்புவது, பாதுகாப்பு இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் நலன்சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் கூறியதை அடுத்து, சாட்சியுடன் இரண்டு சட்டத்தரணிகள் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் திங்களன்று சாட்சி கூறிய இடங்களுக்கு சாட்சியை நேரில் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், தடயங்கள், சான்றுகளை சேகரிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

அதன் போது, சாட்சியின் பாதுகாப்பு கருதி இரண்டு சட்டத்தரணிகள் சாட்சியுடன் கூட இருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles