Monday, September 22, 2025
28 C
Colombo
கிழக்குமாவீரர் தின ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது 

மாவீரர் தின ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது 

மாவீரர் தின ஏற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான நிதர்சன் உள்ளிட்ட நான்கு பேரை நேற்று (27) இரவு வீதியில் வைத்து கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தலை ஏற்பாடு செய்துவந்த ஏற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான நிதர்சன் நேற்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் முடிவுற்றதும், கொடிகள், கம்பங்கள், ஜெனரேற்றர்இ ஒலி பெருக்கியை கழற்றிக் கொண்டு வாகனத்தில் 4 பேருடன் பிரயாணித்துள்ளார்.

இந்த வாகனத்தை வீதியில் வைத்து பொலிஸார் மறித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டவிரோத தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கீதங்கள் ஒலிபரப்பியமை போன்ற குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles