Thursday, April 23, 2026
25.6 C
Colombo
கிழக்குமாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (27) மாலை குறித்த நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைதானார்.

43 வயதான சந்தேக நபர் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதுடன், அவரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles