சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நிறைவடைந்தது.
இதன்போது, ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு எதிராகவும் 2 நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் நாளை கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சபையில் நாளை பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன்போது, எதிர்க்கட்சி சார்பில் ஒருவரை முன்னிலைப்படுத்தவும் வாக்கெடுப்பைக் கோரவும் முடிவு செய்யப்பட்டது.
பிரதி சபாநாயகராக இம்தியாஸ் பாக்கீர்மாக்காரை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், சபையில் வைத்தே பெயர் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்..