Friday, September 20, 2024
31 C
Colombo
வடக்குயாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞன் உயிரிழந்தது, யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால்,கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது, நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று, சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்று இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles