Wednesday, January 21, 2026
24.5 C
Colombo
வடக்குகிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைபாடு

கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைபாடு

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று முன்தினம் தாழ்விறங்கியுள்ளது.

தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடர்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் முழ்கியுள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு மேல் சுத்தமான குடிநீரை பெறக்கூடிய வகையில் அயலவர்கள் பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் குறித்த கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியுள்ளது.

அத்துடன் கிணற்றின் சூழ உள்ள பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன் இது தொடர்பாக அதிகாரிகள் தமக்கேதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என கிணற்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles