Sunday, July 20, 2025
27.2 C
Colombo
வடக்குவவுனியாவில் 7 வர்த்தக நிலையங்களில் திருட்டு

வவுனியாவில் 7 வர்த்தக நிலையங்களில் திருட்டு

வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றய தினம் இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையங்களின் கதவுகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் 50,000 ரூபா வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles