Friday, January 16, 2026
22.8 C
Colombo
மலையகம்பாதையில் கவிழ்ந்த பேருந்து

பாதையில் கவிழ்ந்த பேருந்து

பதுளை – அலுகொல்ல, கந்தேகெதர பாதையில் பயணித்த பேருந்து ஒன்று கொஹொவில பிரதேசத்தில் கவிழ்ந்து இன்று (20) விபத்துக்குள்ளானது.

பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே கொஹோவில கோவிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 12 பேர் பயணித்ததாகவும் அவர்களில் எவருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles