கிழக்குஅம்பாறையில் இளைஞன் சடலமாக மீட்பு

அம்பாறையில் இளைஞன் சடலமாக மீட்பு

வர்த்தக கட்டட தொகுதி அறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் – சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் நேற்று (16) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற நீதவான் உத்தரவின் பிரகாரம் மீட்கப்பட்ட சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 22 வயது மதிக்கத்தக்க நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles