Sunday, May 11, 2025
29 C
Colombo
ஏனையவைஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு அருகில் கொள்கலன் வாகனத்தில் இந்த சிகரெட்டுகளை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்கலன் வாகனமொன்று ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வாகனம் நிறுத்தப்பட்டு சிகரெட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த கொள்கலன் சுமார் 40 அடி நீளமானது எனவும், அதனை ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவுக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles