Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
வடக்குசட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாடுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாடுகளுடன் இருவர் கைது

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை 5மணியளவில் மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அதில் சோதனையினை முன்னெடுத்தனர்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகள் கடத்திச்செல்லப்பட்டமை தெரியவந்தது.

குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த விசேட அதிரடிபடையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அத்துடன் வாகனத்தில் இருந்து 8 பசு மாடுகள் உட்பட 14 மாடுகள் பொலிசாரால் கைப்பற்பட்டதுடன் அவற்றை கடத்திச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles