Sunday, July 20, 2025
28.4 C
Colombo
அரசியல்பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல - மஹிந்த

பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல – மஹிந்த

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை தாம் விளக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேர்தல் மட்டத்தில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles