தாம் எப்போதும் நீதிமன்றத்தை மதிப்பதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாகவும் ஆழமாகவும் கலந்துரையாடினால் பாராளுமன்றமே சரியான இடம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே காரணம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடிப்படை உரிமைகளில் எழுத்துப்பூர்வ மனுக்கள் மற்றும் எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நிதி அதிகாரங்கள், சட்டம் இயற்றுதல் மற்றும் சட்டங்களை அமுல்படுத்துதல் ஆகிய இயலுமை பாராளுமன்றத்திற்கே உள்ளதாகவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பொருளாதார நெருக்கடி குறித்து ஆழமாக ஆராய முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.