Wednesday, May 14, 2025
27.9 C
Colombo
வடக்குயாழில் சீரற்ற காலநிலை காரணமாக 94 குடும்பங்கள் பாதிப்பு

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக 94 குடும்பங்கள் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 317பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 197 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அதே பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் ஒரு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles