Thursday, January 23, 2025
29 C
Colombo
வடக்குவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன் 14 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles