Thursday, June 11, 2026
25 C
Colombo
வடக்குசூட்சுமமாக பதுக்கி வைத்திருந்த சட்டவிரோத மதுபான கொள்கலன்கள் மீட்பு

சூட்சுமமாக பதுக்கி வைத்திருந்த சட்டவிரோத மதுபான கொள்கலன்கள் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் காணப்படுவதால், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும், கோடாக்களும் கைப்பற்றபட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடா கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles